Friday, July 30, 2010

பொது சுத்திகரிப்பு நிலையம் வேண்டும்

மழை பெய்யும்போது பொங்கி வரும் ரசாயனக் கழிவு நுரையால் கோவை- கிருஷ்ணாம்பதி வாய்க்கால் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகும் ரசாயனக் கழிவுகளால் இந்த நுரை உருவாவதாக புகார் எழுந்துள்ளது.

÷தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், சீரநாயக்கன்பாளையம் இடையே உள்ள கிருஷ்ணாம்பதி வாய்க்காலில் மழை நேரங்களில் நுரை பொங்கி வருகிறது. காற்று பலமாக வீசும்போது இந்த நுரை பறந்து சென்று அருகிலுள்ள வீடுகளில் விழுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

÷நுரை கண்களில் படும்போது கண் எரிச்சல் ஏற்படுவதாக, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வாய்க்காலில் செல்லும் கழிவுநீர், செல்வம்பதி, முத்தண்ணன்குளம் ஆகியவற்றில் கலந்துவருவதால் அக்குளங்களைச் சுற்றி நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

÷இதுகுறித்து 57}வது வார்டு கவுன்சிலர் எம்.வேல்முருகன் கூறியது:

÷தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ரசாயன உரங்கள் இடுதல் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். அதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள், இந்த வாய்க்காலில் இரவு நேரங்களில் கலக்கப்படுகின்றன.

÷வெயில் நேரத்தில் இக்கழிவுகள் வாய்க்காலில் தேங்கிவிடுகின்றன. மழை பெய்யும்போது இக்கழிவுகளில் இருந்து நுரை பொங்கி வருகிறது. அதேபோல சீரநாயக்கன்பாளையம் அருகே இருக்கும் தனியார் ரசாயன நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகளில் இருந்தும் நுரை வெளியாகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை, என்றார்.

No comments:

Post a Comment