திருப்பூர், நொய்யலாற்றில் தெர்மாகோல் பெட்டிகள், மீன் இறைச்சி கழிவுகள்
கொட்டப்பட்டுள்ளதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் பார்க்
ரோட்டில், நொய்யலாற்றையொட்டி மீன் மார்க்கெட் உள்ளது. தினமும் 15 டன்
மீன்கள், இங்கு விற்பனைக்கு வருகின்றன. மீன்கள் கெடாமல் இருக்க,
தெர்மாகோல் பெட்டிகளில், ஐஸ் கட்டிகள் வைத்து கொண்டு வரப்படுகின்றன.
மீன்களை எடுத்தபின், காலியான தெர்மாகோல் பெட்டிகள், மார்க்கெட்டுக்கு
பின்புறம் உள்ள நொய்யலாற்றில் வீசப்படுகின்றன. மண்ணில் மக்காத தெர்மாகோல் பெட்டிகள், அப்பகுதியில் பரவிக் கிடக்கின்றன. ஆயிரக் கணக்கான பெட்டிகள் ஆற்றுக்குள் கிடப்பதால், தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்பட் டுள் ளது. மீன் இறைச்சி கழிவுகளும் ஆற்றில் கொட்டப்படுகின்றன. நொய்யலாற்றில் நீர் செல்ல முடியாத அளவுக்கு கழிவு அடைத்துள்ளதால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது; அப்பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. சில
நாட்களில் மீன் மார்க்கெட், தென்னம்பாளையம் பகுதிக்கு மாற்றம்
செய்யப்பட்டதும், நொய்யலாற்றில் உள்ள தெர்மாகோல் பெட்டிகள் உள்ளிட்ட கழிவுகளை
அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் நீர்
வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களையும் அகற்றி, ஆற்றை தூர்வார
வேண்டும்
என்பது பொதுமக்களின் கோரிக்கை.
என்பது பொதுமக்களின் கோரிக்கை.
No comments:
Post a Comment