Sunday, December 18, 2011

அனுமதியில்லாத சாயப்பட்டறைகள் : பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து

திருப்புத்தூர் கிராமங்களில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகளால் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து உள்ளது.திருப்பூர் சாய தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டுமின்றி நொய்யல் ஆறும் மாசடைந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். கடந்த 2011 ஜனவரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப் படி திருப்பூரில் இயங்கிய 754க்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகள் மூடப்பட்டன.


இதனையடுத்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கிராமத்து தோட்டங்களில் சாயப்பட்டறைகள் இயங்க துவங்கின.

சிவகங்கை மாவட்டத்திலும் வருவாய்த்துறையினர் சிலவற்றை கண்டுபிடித்து எச்சரித்து மூடவைத்தனர். எனினும் கிராமத் தோட்டங்களில் சாயப்பட்டறை நடத்தப்படுவது தொடர்கிறது.


தற்போது எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அருகில் உள்ள தோட்டத்தில் சாயப்பட்டறை இயங்குவதாக தெரிகிறது.இரவில் இயங்கும் இப்பட்டறை மூலம் வெளியேறும் கழிவுகளால் இப்பகுதி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகிலுள்ள கண்மாய் நீரும் மாசுபடுவதால் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அனுமதி இல்லாமல் நடைபெறும் சாய பட்டறைகளை மூட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment