க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றியத்தில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் பாது காப்பு சங்க தலைவர் கந்தசாமி கலெக்டரிடம் கொடுத்த மனு:
க.பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சியில் ஆத்துப்பாளையம் அணை உள்ளது. 1980 ஆண்டில் 650 ஏக்கரில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 1990ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. மழை, வெள்ள காலங்களில் வரும் உபரி நீர், கீழ் பவானி வாய்க்காலில் வரும் கசிவு நீரை நொய்யல் அணையில் தேக்கி கரூர் மாவட்டத்தில் 19,000 ஏக்கர் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. அணை கட்டி 5 ஆண்டு கள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்து வந்தது. அதன் பின் திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் கலந்து வந்ததால், உயர் நீதிமன்ற உத்தரவு படி அணை மூடப்பட்டது. அதன்பிறகு நொய்யல் ஆற்றில் இருந்து அணைக்கு தண்ணீர் வருவது தடுக்கப்பட்டது.
இந்நிலையில் தொட்டிபாளையத்தில் அணை கட்ட வேண்டும். பவானி எல்.பி.பி. வாய்க்கால் கசிவு நீர் மற்றும் மலையத்தாபாளையம் ஓடை தண்ணீர் ஆகியவற்றை தொட்டிபாளையம் அணைக்கு கொண்டு வர வேண்டும். பின்னர் ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீரை கொண்டு பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் பலர் அரசுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர். கோரிக்கை ஏற்கப்பட்டு ழீ72 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் தற்போது 99 சதவீத முடியும் நிலையில் உள்ளது.
ஆனால் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் அணைக்கு தண்ணீர் வரும் ஊட்டு கால்வாய் அணை மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லை. போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி கிடக்கிறது. இவற்றை தேசிய ஊரக வேலை திட்டத்தில் தூர் வார வேண்டும், ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மலையத்தாபாளை யம் கரையில் கிடைக்க பெறும் எல்.பி.பி கசிவு நீரை வீணாக்காமல் சேமிக்கும் அணை, அதில் இருந்து வெளியேறும் வாய்க்கால் களை தூர் வார வேண்டும். இவ்வாறு செய்தால், கடந்த 16 ஆண்டுகளாக இந்த அணையை நம்பியே இருக்கும் 12,000 விவசாயிகளின் 19,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறமுடியும்.
No comments:
Post a Comment