Sunday, December 18, 2011

அனுமதியில்லாத சாயப்பட்டறைகள் : பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து

திருப்புத்தூர் கிராமங்களில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகளால் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து உள்ளது.திருப்பூர் சாய தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டுமின்றி நொய்யல் ஆறும் மாசடைந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். கடந்த 2011 ஜனவரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப் படி திருப்பூரில் இயங்கிய 754க்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகள் மூடப்பட்டன.


இதனையடுத்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கிராமத்து தோட்டங்களில் சாயப்பட்டறைகள் இயங்க துவங்கின.

சிவகங்கை மாவட்டத்திலும் வருவாய்த்துறையினர் சிலவற்றை கண்டுபிடித்து எச்சரித்து மூடவைத்தனர். எனினும் கிராமத் தோட்டங்களில் சாயப்பட்டறை நடத்தப்படுவது தொடர்கிறது.


தற்போது எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அருகில் உள்ள தோட்டத்தில் சாயப்பட்டறை இயங்குவதாக தெரிகிறது.இரவில் இயங்கும் இப்பட்டறை மூலம் வெளியேறும் கழிவுகளால் இப்பகுதி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகிலுள்ள கண்மாய் நீரும் மாசுபடுவதால் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அனுமதி இல்லாமல் நடைபெறும் சாய பட்டறைகளை மூட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, December 16, 2011

நொய்யல் குறித்து ஆலோசனை கூட்டம்

நொய்யல் பாதுகாப்பு அமைப்பு 11:04pm Dec 15
அனைவருக்கும் அன்பு வணக்கம்,
வருகிற 01.01.2012 அன்று திருப்பூரில், நொய்யல் குறித்து ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்துள்ளளோம் ! நொய்யல் நதியை பாதுகாக்க என்ன செய்யலாம் ? சாயப்பட்டறை கழிவுகளால் மறுபடியும் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க என்ன செய்யலாம் ? திட கழிவுகளுக்கு(Sludge) நிரந்தர தீர்வு தான் என்ன ? நொய்யல் ஆற்றில் கழிவுகள்,குப்பைகளை போடுவதை எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் ? மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் ?

இன்னமும் திருப்பூரில் அனுமதி இல்லாமல் இயங்கி கொண்டு இருக்கும் சிறு சிறு சாயப்பட்டறைகளின் கழிவு நீர் சாக்கடை வழியாக நொய்யல் ஆற்றில் கலந்து கொண்டு தான் இருக்கிறது. அதை எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் என்பது குறித்து முக்கிய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கலாம் ! அனைவரது மேலான கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது ! ! !

வரவேற்புரை - திரு.செந்தில்நாதன் அவர்கள்,
சிறப்புரை - திரு.ஓசை காளிதாசன் அவர்கள்,
நன்றியுரை - திரு.மோகன் தாஸ் அவர்கள்,
மற்றும் சில இயற்க்கை ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்...

அனைவரையும் கூட்டத்தில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம் !

தேதி - 01.01.2012
நேரம் - மாலை 3 மணி முதல்

கூட்டம் நடக்கும் இடம்:

SAVE Meeting Hall
5, ஐஸ்வர்யா நகர்,
லக்க்ஷன திரையரங்கம் அருகில்,
தாராபுரம் சாலை,
திருப்பூர் - 8.

தொடர்புக்கு - 9843667736, 9894242164

Sunday, December 11, 2011

Tirupur textile producers seek loan restructuring

Textile manufacturers of the Tirupur town in the south Indian State of Tamil Nadu have urged the Union Government for restructuring of their loans amounting to Rs. 20 billion.

The loss incurred by the town’s textile producers during the current fiscal is estimated to be around Rs. 35 billion, mainly owing to the increased cost of manufacturing due to the closure of dyeing units.

Several dyeing units in the textile town had to shutdown following an order of Madras High Court earlier this year. The Court had directed the closure of dyeing units stating that the effluents from the factories are causing irreversible damage to the Noyyal River.

Mr. A Sakthivel, President of Tirupur Exporter's Association (TEA) told fibre2fashion, “Looking at the present scenario, we have requested the Government for a one year window for the repayment of existing loans. The Ministry of Textiles is going to forward our request to the Ministry of Finance and we hope they will come up with a solution.”

Tirupur garment industry is responsible for the Noyyal river effluent water. Because of the effluent more than 2,00,000 farmers lost their livelihood. They also suffer the debt trap. In this situation TEA must rise their voice for the affected people.

Wednesday, November 9, 2011

ஒரத்துப்பாளையம் அணை தண்ணீர் பாழ்: குப்பையும் மலை போல் சேர்ந்தது

திருப்பூர் நகர் வழியே ஓடிவரும் நொய்யலாறு, அங்குள்ள சாயப் பட்டறை கழிவால், பயன்படுத்த முடியாத ஆறாக மாறிவிட்டது. திருப்பூரில் இருந்து, 35 கி.மீ., தொலைவில், ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது. ஐகோர்ட் தலையீட்டால், அணைப் பகுதி விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது. ஆனால், நவ., 7ம் தேதி திருப்பூரில் ஏற்பட்ட வெள்ளத்தால், 15க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். மேலும், 15 ஆயிரம் கன அடிக்கு மேல் வெளியான வெள்ளம், ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கியது. ஐகோர்ட் உத்தரவின்படி, தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, கொடுமுடி அருகே காவிரியில் கலந்தது. தற்போது அணைக்கு, 1,000 கன அடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம், 19 அடியாக உள்ளது. இவ்வளவு வெள்ளம் வந்த போதும், அணையில் தேங்கியுள்ள தண்ணீரின் நச்சு உப்புத் தன்மை குறையவில்லை. சாதாரணமாக, 200 டி.டி.எஸ்., வரை உப்புத் தன்மை கொண்ட தண்ணீரை குடிநீராக பயன்படுத்தலாம். அதற்கு மேல் அதிகரிக்கும் உப்பு த்தண்ணீர் எதற்கும் பயன்படாது. அதற்கான அளவீட்டை, "டி.டி.எஸ்' என்பர். தற்போது, ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கியுள்ள தண்ணீரில், 1,000 டி.டி.எஸ்., உப்பு உள்ளது. வெள்ளத்தை பயன்படுத்தி, திருப்பூர் சாயப் பட்டறைகள் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திருப்பூர் பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட குப்பை, பாலித்தீன் கவர்கள் மலை மலையாக அணைக்குள் தேங்கிக் கிடக்கின்றன.


இதுகுறித்து, பொதுப்பணித் துறை ஜே.இ., வடிவேல் கூறியதாவது: அணைக்கு வரும் நீர் அளவு, உப்புத் தன்மையை ஒவ்வொரு மணி நேரமும் கணக்கிடுகிறோம். மழைநீருடன், திருப்பூர் பகுதி சாயக் கழிவுநீரும், சாக்கடை நீரும் கலந்து அணைக்கு வந்து விட்டது. அணையில் துர்நாற்றம் வீசுகிறது. வெள்ளம் அதிகமாக வந்த போதே, 1,000 டி.டி.எஸ்., உப்புத் தன்மை இருந்தது. தற்போது நீர் வரத்து குறையக் குறைய, டி.டி.எஸ்., அளவு அதிகரிக்கத் துவங்கி விட்டது. தற்போது, 1,300 வரை டி.டி.எஸ்., உள்ளது. இது விவசாயத்துக்கும், குடிப்பற்கும் ஏற்றது அல்ல. அதனால், அணை நீரையும், நொய்யல் ஆற்று நீரையும் யாரும் குடிக்கவோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த வேண்டாம் என, கிராமங்களில் அறிவித்துள்ளோம். நொய்யல் கரையோரம் தேங்கிக் கிடக்கும் பாலித்தீன் கவர்களை அப்புறப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, November 7, 2011

Fourteen washed away in flash floods in Tirupur

COIMBATORE: At least fourteen living on the banks of the swelling Noyyal River in the hosier city of Tirupur in western Tamil Nadu could be dead after flash floods washed away their houses in the wee hours of Monday. The city has been lashed by incessant rains on Sunday night. Five of those missing and suspected to be dead are from a single family.

According to police officials, rain started pounding the city from around 10.30pm on Sunday night and went on until about 3am. The affected areas are settlements along the banks of the Noyyal River and its tributaries running through the heart of the city.

The main reason for the death is unplanned growth of the Tirupur. Because in Tirupur there is no permanent job for workers. No company not worry about the workers house. So poor workers are occupied their house in the banks of the Noyyal river. Boom of the Knitting industry workers are living in slums at banks of the river. Many place river becoming narrow day by day. So the 6.11.2011 night heavy rain many workers lost their life.

Tirupur company must provide the housing for their workers. One thing is exposed that tirupur industry does not worry about the environment of river and environment of workers.

Tuesday, October 11, 2011

நொய்யல் ஆறு நொய்யல் ஆறு நொய்யல் ஆறு

கோவையில் நொய்யல் ஆறு என நாம் குறிப்பிட்டால் இப்போது இருக்கும் மக்களுக்கு அது சிறுவாணி அணை நீர் என நினைக்கின்றனர். பலரும் நொய்யல் என்றால் தண்ணீரே வராத ஒரு ஆறு என நினைக்கின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல. எத்தனையோ தடைகளை கடந்து கோவையை நோக்கி வரும் நொய்யலுக்கும் ஒரு பின்னணி உண்டு. நொய்யல் ஆறு எங்கிருந்து எப்படி உருவாகிறது என தெரிந்துகொண்டால் அதை நாம் போற்றத் துவங்கி விடுவோம்.

மேற்கு தொடர்ச்சி மலையில் கோவைக்கு மேலே சரியாக 2 ஆயிரம் அடி உயரத்தில் பெய்யும்போது அது பல்வேறு சிறு ஓடைகளாக உருப்பெறுகிறது. இப்படி 7 ஓடைகள் ஒன்று சேர்ந்து அது குஞ்சரான் முடி என பெயர் பெற்று மலைகளில் இருந்து பெரும் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதுதான் நீங்கள் சிறுவாணி அடிவாரத்தில் காணும் கோவை குற்றாலம் இதை பெரியாறு என்றும் அழைக்கிறார்கள்.

மற்றொரு புரத்தில் ஏறத்தாழ வெள்ளிங்கிரி மலையிலும். அதை ஒட்டிய பகுதிகளிலும் பெய்யும் மழை, 5 ஓடைகளாக ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை என பெயர் பெற்று ஏற்கனவே ஓடிவரும் பெரியாறுடன் செம்மேடு அருகே ஒன்று சேர்கிறது.

இந்த பெரியாறு மட்டும் நொய்யல் என அழைக்கப்படுவதில்லை.

இத்துடன் தூத்துமலை ஓடை, கொடுவாய்புடி ஓடை பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என அழைக்கப்படுகிறது. இந்த சின்னாறு சாடி வயல் வழியாக நாம் ஏற்கனவே கூறிய பெரியாறுடன் சோலை படுகையில் ஒன்று சேர்கிறது. அவ்வளவு தானா நொய்யல் என கேட்க வேண்டாம்.

பெரியாறு சின்னாறு சேர்ந்த உடன் இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் 20 ஓடைகளை ஒன்று சேர்த்துவரும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் தொம்பிலிபாளையத்தில் ஒன்று சேர்கிறது. இந்த தொள்ளாயிரம் மூர்த்தி கண்டிதான் நீங்கள் சினிமாவில் பார்த்த வைதேகி நீர்வீழ்ச்சி.

தொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய எல்லா ஆறுகளும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அங்கு நொய்யல் என பெயர் பெறுகிறது.

பின்னர் பேரூர், கோவை நகர், சூலூர், திருப்பூர், கொடுமணல், காங்கயம் வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் நமது ஜீவ நதி கலக்கிறது.

நொய்யலின் சராசரி நீளம் 160 முதல் 170 கிலோ மீட்டர். இந்த ஆற்றின் சராசரி அகலம் 30 அடி. நொய்யலில் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகள் 32. நொய்யல் ஆற்று நீரை நம்பி தற்போது உள்ள குளங்களின் எண்ணிக்கை 19.

நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரையும் மழை காலத்தில் கிடைக்கும் பெரும் வெள்ளத்தையும் நாம் முறைாக பயன்படுத்தினால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சமே வராது.

நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது அதை தடுப்பணையில் தடுத்து அங்கிருந்து சிறிய வாய்கால்கள் மூலம் குளங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் முறை நொய்யலில் பயன்படுத்தப்படுகிறது. நொய்யலில் பெரும் வெள்ளம் செல்லும்போது பலரும் இந்த நீரை அப்படியே குளங்களுக்கு திருப்பினால் என்ன என கேள்வி கேட்கின்றனர். இது மிகவும் அபாயகரமானது. காரணம் நொய்யல் ஆற்றில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதன் வேகம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இந்த நீரை குளங்களுக்கு திருப்பினால் ஒரு சில மணி நேரங்களில் குளம நிரம்பிவிடும். பின்னர் இந்த நீரை தடுக்க இயலாமல் குளமே காணாமல் போய்விடும். எனவே தான் நொய்யல் ஆற்று நீரை தடுத்து வாய்க்கால்கள் மூலம் குளங்கள் நிரப்பப்படுகிறது. கிளை வாய்க்கால்கள் மூலம் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்திலும் பின்னர் மதுரையில் பாண்டிய மன்னர்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நொய்யல் என கூடுதுறையில் பெயர் பெற்றதும் இந்த ஆறு கோவையை நோக்கி ஓடி வருகிறது. நொய்யலில் குறுக்கே எந்த தடுப்பு இருந்தாலும் அதை தகர்த்துக் கொண்டு ஓடி வருவதற்கு காரணம் உள்ளது.

கூடுதுறையில் இருந்து ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு மீட்டர் தாழ்வாக நொய்யல் அமைந்துள்ளது. எனவே 30 கிலோ மீட்டர் தூரமுள்ள கோவைக்கு நொய்யல் வரும்போது அதன் நிலை 15 மீட்டர் கீழே இறங்கியுள்ளது.

இது கோவை வரை மட்டுமல்ல. காவிரி ஆற்றுடன் கலக்கும் வரை இதே போல இயற்கையாகவே நொய்யலில் அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நொய்யல் ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது.

Saturday, October 1, 2011

நொய்யல் பாயும் குளங்களில் அவலம் :

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால், நகரிலுள்ள குளங்கள் அனைத்தும் கழிவுகளின் சங்கமமாக மாறி வருகின்றன. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 8 குளங்கள் அமைந்துள்ளன. நொய்யல் ஆறு பாய்ந்து வரும் இந்த குளங்கள் அனைத்தும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போதே, சாயக்கழிவு நீர் மற்றும் கழிவுநீர் அனைத்தும், கால்வாய்கள் வழியாக இந்த குளங்களில் சங்கமித்து வந்தன. இவற்றைத் தடுக்கவும், அழிந்து வரும் இந்த குளங்களுக்கு புத்துயிர் கொடுக்கவும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில் புதிய திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, இங்குள்ள 8 குளங்களையும் புனரமைக்க 126 கோடி ரூபாய் மதிப்பில், "விரிவான திட்ட அறிக்கை'யும் தயார் செய்யப்பட்டது.இத்திட்டத்தில் மத்திய அரசின் 50 சதவீத மானியத்தைப் பெற வேண்டுமெனில், சம்மந்தப்பட்ட குளங்கள் அனைத்தும் மாநகராட்சி வசமிருக்க வேண்டுமென்று கூறி, பொதுப்பணித்துறையிடம் போராடி இந்த குளங்களை வாங்கியது மாநகராட்சி நிர்வாகம். குளங்களைக் காக்கும் பொறுப்பை மாநகராட்சி எடுத்த பின்பே, இவற்றின் நிலைமை இன்னும் மோசமானது. வழக்கமாகக் கலக்கும் கழிவுநீருடன், அரசு மருத்துவமனைக் கழிவு நீரும் சேர்ந்து வாலாங்குளத்தை நாறடித்தது. வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், பெரியகுளம், முத்தண்ணன் குளம் என எல்லா குளங்களின் கரைகளிலும் கட்டடக்கழிவுகள் தினமும் குவிக்கப்பட்டுள்ளன. தட்டுத்தடுமாறி வந்துசேர்ந்த தண்ணீர் அனைத்தையும் ஆகாயத்தாமரைகள் மூடி மறைத்துள்ளன. கழிவுநீரையும், கழிவுகளையும் கொட்டுவதைத் தடுக்க அக்கறை, துளியளவும் இருப்பதாகத் தெரியவில்லை. விளைவு, கட்டடக் கழிவுகளுடன் மற்ற கழிவுகளும் குளங்களில் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது. சமீபகாலமாக, "செப்டிங் டேங்க்' கழிவுகளை லாரியிலிருந்து நேரடியாக குழாய் வழியாகக் கலந்து விடுவதும் அதிகரித்துள்ளது. அக்கறையற்ற அதிகாரிகள் காரணமாக, இந்த குளங்கள் அனைத்தும் வளமிழந்து, வறண்டு, மைதானங்களாகவும், கழிவுக் கிடங்குகளாகவும் மாறி வருகின்றன. முத்தண்ணன்குளத்தில் கோழிக்கழிவுகளும், மீன் கழிவுகளும் தினமும் கொட்டப்படுகிறது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, குளங்களைச் சுற்றிலும் வேலி அல்லது நடைபாதை அமைப்பது, கழிவுகளைக் கொட்டுவோர்க்கு அதீத அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் பணி; அதைச் செய்ய முடியாவிட்டால், குளங்களை மீண்டும் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்து விடுவதே நல்ல நிர்வாகத்துக்கு அழகு.